இலவச மடிக்கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவச மடிக்கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 1,040 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயிலும் 1,040 மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இலவச மடிக்கணினியை சனிக்கிழமை 13/04/2013 வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சி.ஜெ.குமார், நகரச் செயலர் குமரன், ஒன்றியச் செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் எம்.சி. சம்பத் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கி பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் தமிழாழி கொற்கைவேந்தன் நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர் சம்பத் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வெளியிட்டார். அப்போது நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலர் நிஜாமுதீன் உடனிருந்தார்.

பாதுகாப்பான குடிநீர்: 

மாணவர்கள் கோரிக்கை மாணவர்கள் சார்பில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், அமைச்சரிடம் அளித்த மனு:

இக் கல்லூரியில் பாதுகாப்பான குடிநீர் கிடையாது. எனவே தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி கொடுத்து மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அனைத்து மாணவர்களும் அமர்ந்து சாப்பிடும் வகையில் கேன்டீன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு

கடலூர் :

           கடலூர் அரசு கல்லூரி மாணவர்களின் கறுப்புக் கொடி போராட்ட அறிவிப்பால் நேற்று நடந்த இலவச  மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்கவில்லை. அரசு கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினி வழங்கி வருகிறது. கடந்தாண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

          இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 933 பேருக்கு வழங்குவதற்காக லேப்டாப் தயார் நிலையில் உள்ளது.இதனை அறிந்த 3ம் ஆண்டு மாணவர்கள், முதலில் தங்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த 26ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சம்பத், லேப் டாப் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

           ஆவேசமடைந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடந்த 27ம் தேதி கல்லூரியிலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், பிப்ரவரி மாதத்திற்குள் வழங்கப்படும் என்றனர். அதனை ஏற்க மறுத்த மாணவர்கள், லேப் டாப் வழங்க கல்லூரிக்கு வருகை தரும் அமைச்சர் சம்பத்திற்கு எதிராக கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்தனர். இருப்பினும், கல்லூரி நிர்வாகம் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் வழங்க நேற்று ஏற்பாடு செய்தனர். அதில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களை மட்டும் கல்லூரிக்கு வருமாறு அறிவித்தது. ஆனால், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று காலையிலேயே கல்லூரியில் கூடினர். காலை 10 மணிக்கு கல்லூரி உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                கல்லூரி முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த தகவலை அறிந்த அமைச்சர் சம்பத்,கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்கவில்லை. சப் கலெக்டர் லலிதா, 8 மாணவர்களுக்கு மட்டும்இலவச லேப் டாப்களை வழங்கினார். மற்றவர்களுக்கு நாளை (31ம் தேதி) வழங்கப்படும் என கூறிவிட்டுச் சென்றார். விழாவிற்கு வந்த சப் கலெக்ட ரும், தங்களின் கோரிக்கையை என்ன என்றுகூட கேட்காததால் நாளையும் போராட்டத்தைத் தொடர மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். .

Read more...

வியாழன், 27 டிசம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி சாலை மறியல்

கடலூர்:

          பெரியார் கலைக் கல்லூரி அனைத்துத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி  வழங்க வலியுறுத்தி கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

      கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரில் நாளை (28ம் தேதி) இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில்  கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் 870 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி  வழங்காமல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதைக் கண்டித்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியிருந்து ஊர்வலமாகச் சென்று பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

           தகவலறிந்த தாசில்தார் எழிலன் மற்றும் கடலூர் புதுநகர் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.  பின்னர் மாணவர்களின் பிரதிநிதியான ராமு தலைமையில் மாணவர்கள் கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

Rural Industries Minister M.C.Sampath gives away free laptops to the students of Cuddalore Periyar Government Arts College

           




       Rural Industries Minister M.C.Sampath giving away a laptop to a student of Periyar Government Arts college in Cuddalore on Saturday

            Rural Industries Minister M.C.Sampath gave away as many as 802 free laptops to the students of Periyar Government Arts College here on Saturday (31/03/2012).

    At a function held on the premises of the college, the Minister also laid the foundation for a ch  emistry laboratory to be built at a cost of Rs 50 lakh and a women's hostel to be constructed at a cost of Rs 80 lakh. Speaking on the occasion Mr Sampath said that he was always amenable to fulfil the demands of the college. The women's hostel was a long-felt need as it would enable those hailing from far-off places to enrol themselves in the college.

       He said that a majority of the students studying in the college belonged to the economically weaker sections of society. Therefore, to enable them to acquire knowledge to face the competitive situation in the contemporary world, Chief Minister Jayalalithaa launched the free laptop distribution scheme. With laptops, the students could access the knowledge sources the world over. They should utilise the device to plan their academic career and excel in their chosen field. The government had launched many a scheme for promoting higher education and therefore, he called upon the students to utilise the opportunity to go up in the ladder of success. District Collector Rajendra Ratnoo said students should keep their ears to the ground. They were told to keep track of the recent trends in the academia and the job market.


Read more...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர்:

           கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணிப்பு  செய்தனர்.

           இந்திய மாணவர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்தது. வேலைநிறுத்தம் செய்த மாணவ, மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தொடர் முழக்கமிட்டனர். 

         தொடர் முழக்கப் போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரசன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி, மாணவர்கள் குப்புராஜ், அழகுநாதன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more...

சனி, 24 செப்டம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூர்:

         இலவச மடிக்கணினி வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் இரண்டாம் நாளாக நேற்று வகுப்பை புறக்கணித்து, கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

            பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினிவழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இலவச மடிக்கணினியை முதுகலை மாணவர்களுக்கும் வழங்கக்கோரி கடலூர் அரசு கலைக் கல்லூரி எம்.காம்., - எம்.எஸ்சி., (முதுநிலை) மாணவ, மாணவிகள் 120 பேர் நேற்று முன்தினம் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

              இரண்டாம் நாளாக நேற்று மாணவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், முதுகலை மாணவர்களுக்கு ஆய்வுப் பணி (பிராஜக்ட் ஒர்க்) ஒரு பாடப் பகுதியாக உள்ளதால், எங்களுக்கும்
இலவச மடிக்கணினி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இலவச மடிக்கணினி பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more...

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு

கடலூர்:

      டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச மடிக் கணினி வழங்குவதாக அறிவித்து உள்ளது. அரசுக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக் கணினி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

              இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி வாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவ மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அனைத்து மாணவ மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரியை விட்டு வெளியேறினர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP