கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 1,040 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு
பயிலும் 1,040 மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.
சம்பத் இலவச மடிக்கணினியை சனிக்கிழமை 13/04/2013 வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்
விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம்,
நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சி.ஜெ.குமார், நகரச்
செயலர் குமரன், ஒன்றியச் செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் எம்.சி. சம்பத் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கி
பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் தமிழாழி கொற்கைவேந்தன் நன்றி கூறினார்.
முன்னதாக அமைச்சர் சம்பத் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வெளியிட்டார். அப்போது நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலர் நிஜாமுதீன் உடனிருந்தார்.
பாதுகாப்பான குடிநீர்:
மாணவர்கள் கோரிக்கை மாணவர்கள் சார்பில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், அமைச்சரிடம் அளித்த மனு:
இக் கல்லூரியில் பாதுகாப்பான குடிநீர் கிடையாது. எனவே தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி கொடுத்து மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அனைத்து மாணவர்களும் அமர்ந்து சாப்பிடும் வகையில் கேன்டீன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடலூர் மாவட்ட செய்திகள்
லேபிள்கள்:
இலவச மடிக்கணினி,
பெரியார் கலைக் கல்லூரி,
Free Laptop,
Periyar Arts College
0 கருத்துகள்:
கருத்துரையிடுக