கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
கடலூர்:
பெரியார் கலைக் கல்லூரி அனைத்துத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரில் நாளை (28ம் தேதி) இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் 870 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்காமல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதைக் கண்டித்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியிருந்து ஊர்வலமாகச் சென்று பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தாசில்தார் எழிலன் மற்றும் கடலூர் புதுநகர் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் மாணவர்களின் பிரதிநிதியான ராமு தலைமையில் மாணவர்கள் கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக