கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணிப்பு செய்தனர்.
இந்திய மாணவர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்தது. வேலைநிறுத்தம் செய்த மாணவ, மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தொடர் முழக்கமிட்டனர்.
தொடர் முழக்கப் போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரசன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி, மாணவர்கள் குப்புராஜ், அழகுநாதன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக