ஞாயிறு, 29 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை ஆசிரியர்கள் 2010-2011  

1. முனைவர் சு. தமிழாழிக் கொற்கை வேந்தன், M.A.,M.Phil.,.P.G.Dip.in J & MC., Ph.D., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.  

2. திரு. அ. அர்த்தநாரி, M.A.,M.Phil.,B.Ed., இணைப் பேராசிரியர். 

3. முனைவர் ப. குமரன், M.A.,M.Phil.,Ph.D., இணைப் பேராசிரியர். 

4. முனைவர் கே. பழனிவேலு, M.A.,M.A.,(Ling).,B.Ed.,Dip in Anthropology and Folk lore.,Ph.D., இணைப் பேராசிரியர்.

5. முனைவர் பா. கீதா, M.A.,M.Phil.,Ph.D., உதவிப் பேராசிரியர். 

6. முனைவர் வீ. பன்னீர்செல்வம், M.A.,M.Phil.,B.Ed.,Ph.D., உதவிப் பேராசிரியர். 

7. முனைவர் ந. பாஸ்கரன், M.A.,M.Phil.,B.Ed.,Ph.D., உதவிப் பேராசிரியர்.

8. திரு. சு. இளங்கோ, M.A.,M.Phil.,,Dip in Anthropology and Folk lore., உதவிப் பேராசிரியர்.

9. திரு. ச. விஷ்ணுதாசன், M.A.,M.Phil, Cert.in Hindi, Cert.in Malayalam,  Cert.in Anthropology., உதவிப் பேராசிரியர். 
 

Read more...

புதன், 18 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

கடலூர் : 

           கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. 

           தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முன்தினம் முதல் துவங்கியது. ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்றைய தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 

 விண்ணப்பக் கட்டணம் 

எம்.காம்., - எம்.எஸ்சி., பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் 43 ரூபாயும், 
பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., பாடப் பிரிவுக்கான விண்ணப்பம் 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read more...

சனி, 14 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது: அ.தி.மு.க. கூட்டணியினர் மகிழ்ச்சி

கடலூர்:

        வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதும், கடலூரில் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் எதிரில் அ.தி.மு.க. கூட்டணியினர் மகிழ்ச்சி ஆரவாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். 

              பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் முடிவுகளைக் கேட்க நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கல்லூரி முன் கூடியிருந்தனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு, கடலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் வந்து இருந்தார். ஆனால் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி வரவில்லை. தி.மு.க.வினரையே அதிகம் காண முடியவில்லை.

               4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை 40 நிமிடம் தாமதமாகவே தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. முன்னணியில் இருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும், வெளியில் கூடியிருந்த அ.தி.மு.க. கூட்டணிக் கட்சினர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பலர் துள்ளிக் குதித்தனர். சரமாரியாக பட்டாசுகளையும், வாண வெடிகளையும் வெடித்துக் கொண்டே இருந்தனர். நகரம் முழுவதுமே ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 

         நகரில் சாலை சந்திப்புகளில் எல்லாம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஹோட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. பகல் ஒரு மணிக்கு மேல் சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றிக் காணப்பட்டன. போலீசார் ரோந்து சுற்றி வந்துகொண்டு இருந்தனர்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

             கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் தர்னா போராட்டமும் நடத்தினர். 

            கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடந்தது.

             வாக்கு எண்ணிக்கை முதலாவது, இரண்டாவது மாடிகளில் உள்ள அறைகளில் நடந்தது .வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த செய்தியாளர்கள் போலீசாரால் கடுமையாகச் சோதனையிடப்பட்டனர். பேனா கொண்டு செல்லக் கூடாது என்றும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையாவின் தலையீட்டினால் பின்னர் செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

               வாக்கு எண்ணும் மையத்துக்குள் பலமுறை சென்றுவர அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, செய்தியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த அனுமதி அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தேர்தல் பார்வையாளர்களும் கொஞ்சமும் மதிக்கவே இல்லை. அனுமதிச் சீட்டுகளை செய்தியாளர்களே அச்சிட்டுக் கொண்டு வந்து இருப்பதாகக் கூட சில அதிகாரிகள் தெரிவித்தனர். 

              வாக்கு எண்ணிக்கையின்போது எதையும் முழுமையாக புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் புகைப்படக்கார்கள் மற்றும் செய்தியாளர்களை, மத்திய ரிசர்வ் போலீஸôர் வெளியேற்றினர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும், தேர்தல் பார்வையாளர்களிடமும் முறையிட்டும், மத்திய ரிசர்வ் போலீசாரின் நடவடிக்கை சரிதான் என்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் செய்தியாளர்கள் பலர் சிற்றுண்டிக்காக தரைத் தளத்துக்கு வந்தனர். மீண்டும் வாக்கு எண்ணும் அறைகளுக்குச் செல்ல முயன்றபோது மத்திய ரிசர்வ் போலீஸôரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

              செய்தியாளர்களுக்கு இனி அனுமதி இல்லை என்று தேர்தல் பார்வையாளர்கள் கூறிவிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் செய்தியாளர்களுக்கு அளித்த அனுமதிச்சீட்டு மிகவும் போலியானது என்று கூறியபடி, அவற்றைத் தரையில் வீசி எறிந்து, காலால் மிதித்துச் சிதைத்தனர்.

             எதையும் பொருள்படுத்தாத தேர்தல் நடத்து அலுவலர்களும், தேர்தல் பார்வையாளர்களும் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து விட்டு, அறைகளுக்குள் சென்று விட்டனர். ஜனநாயகத்தின் 4-வது தூண் என்று பேசப்படும் ஊடகங்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் மரியாதை அளிக்காவிட்டாலும், அவர்களின் உரிமைகளை மதிக்கவாவது தெரிந்து வைத்து இருப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பாகும்.

சிதம்பரத்தில்...: 

              சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் எவ்வித வசதியும் செய்யப்படவில்லை. அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் முற்றிலும் செயல்படவில்லை. குடிநீர் வசதி கிடையாது. பத்திரிகையாளர் அமர்ந்திருந்த மீடியா சென்டர் இருந்த பகுதியில் உள்ள கேட்டை போலீசார் மூடி அடைத்தனர்.

             இதனால் பத்திரிகையாளர்கள் மீடியா சென்டரில் செயல்படாமல் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை அறைக்கு வெளியே வைத்துவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறக்கணித்து வெளியேறினர்.பின்னர் சிதம்பரம் டிஎஸ்பி டி.கே.நடராஜன், ஏடிஎஸ்பி காதர்மொய்தீன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சாயபாபா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதியளிதத்தின் பேரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பத்திரிகையாளர்கள் உள்ளே சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more...

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்

கடலூர்:

             வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும் செய்தியாளர்களுக்குக் கட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

            கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறைகளில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. 

                வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்ததும், அறைகள் உள்ளிட்ட பகுதிகளை படம் எடுக்க 14-4-2011 அன்று செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப் பட்டனர். அடுத்து சில நாள்கள் கல்லூரி வளாக தரைத்தளம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த வாரம், வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்துப் போடும் இடம் வரை அனுமதிக்கப் பட்டனர். 

               கடந்த 2 நாள்களாக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. தேவையானால் வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு கல்லூரியைவிட்டு வெளியே வரும்போது புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.  பெரியார் அரசு கலைக் கல்லூரிச் சாலையில் செல்ல முதலில் சில நாள்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கல்லூரிச் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. கல்லூரியை அடுத்துள்ள சில்வர் பீச்சுக்குச் செல்ல, மாற்றுப் பாதையை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். 

             வாக்கு எண்ணிக்கை கல்லூரி கட்டடத்தில் முதல் தளத்தில் நடைபெறும். வாக்கு எண்ணும் நாளன்று தரைத்தளத்தில் உள்ள தகவல் மையத்தில் மட்டும் செல்போன் பயன்படுத்த, செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இப்படி தினமும் ஒரு உத்தரவு, தினமும் ஒரு விதிமுறை என்று தேர்தல் ஆணையத்தில் இருந்து தினமும் வந்த வண்ணம் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தினமும் காலையில் எழுந்ததும் என்ன உத்தரவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர்கள் வரிசை

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர்கள் வரிசை

  1. N. Subbaiyan, M.A., ( 1964 - 1965 )
  2. R. Massaiyadass, M.A., B.T., ( 1965 - 1966 )
  3. M. Raasakannu., M.A., B.O.L., ( 1966 - 1967 )
  4. P.D.Muniyappan., M.A., M.S., ( Iliyanas ) ( 1967 - 1970 )
  5. K.V.Krishnamoorthy., ( March 1970 - November 1970 )
  6. A. Krishnamoorthy., M.A., B.O.L (Hons)., B.L., ( November 1970 - September 1971 )
  7. V.S. Angappan., M.A., M.Sc., ( September 1971 - November 1971 )
  8. D. Kamalakannan., M.A., ( November 1971 - July 1972 )
  9. V.P.Seenuvasan., M.A., ( July 1972 - July 1974 )
10. A. Usman Sherif., M.A., ( 1974 - 1975 )
11. R. Ponnusamy., M.A., B.T., ( 1975 - 1976 )
12. N. Anantha Padmanaban., B.Sc., ( Hons )., ( 1976 - 1978 )
13. R. Narasingam., M.A., B.T., ( August 1978 - May 1980 )
14. M.S.Seenuvasan., M.A., M.Sc., ( USA )., ( August 1980 - March 1982 )
15. S. Pattabiraman., M.A., M.Sc., ( March 1982 - June 1986 )
16. N. Varathappan, M.A., B.T., ( June 1986 - 03.10.1987 )
17. A. Govintharajulu., M.Sc., B.Ed., ( 05.10.1987 - 08.03.1988 )
18. K. Radhakrishnan., M.A., ( 09.03.1988 - 31.05.1989 )
19. T. Rayar, B.Com ( Hons ), M.A., ( 23.06.1989 - 03.06.1991 )
20. K. Karuppan., M.Com., ( 03.06.1991 - 16.02.1992 )
21. T. Seetharaman., M.Com., ( 17.02.1992 - 17.11.1992 )
22. S. Ragavan., M.Sc., ( 28.11.1992 - 31.05.1993 )
23. T. Muthukumaran., M.Sc ( 07.07.1993 - 31.05.1997 )
24. Dr. T.R.Balakrishnan.,M.Sc., Ph.D ( 02.06.1997 - 30.06.1998)
25. M. Balakrishnan., M.Com., M.Phil., ACS., BGL., ( 05.09.1998 - 20.06.2001 )
26. N. Subramaniyan., M.Sc., (21.06.2001 - 31.08.2001 )
27. C. Radhakrishnan., M.Sc., M.Phil., ( 01.09.2001 - 31.05.2002 )
28. R. Santhanakrishnan., M.Sc., ( 01.06.2002 - 19.09.2002 )
29. S. Amaldass., M.Sc., M.Phil., ( 20.09.2002 - 31.05.2003 )
30. R. Jayachandran., M.Sc., Mphil., ( 01.06.2002 - 19.09.2002 )
31. Dr. E. Gomathi., M.A., M.Phil., Ph.D., ( 31.10.2003 - 30.06.2004 )
32. C. Murugesan., M.Sc., M.Phil., D.I.M., ( 23.07.2004 - 30.06.2005 )
33. Dr. R. Shanmugam., M.Sc., Ph.D., ( 01.07.2004 - 22.07.2004 & 01.07.2005 - 31.05.2006 )


Read more...

வியாழன், 5 மே, 2011

கடலூர் பெரியார் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு

கடலூர்:

         கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது.

            தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலூர், தேவனாம்பட்டிணம் அரசு பெரியார் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் வைத்து சீலிடப்பட்டது.

             இந்த வளாகத்தில் எவரும் செல்லாத அளவிற்கு துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு படை மற்றும் ஆயுதப்படை போலீசார் என மூன்றடுக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அதிலிருந்து போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் கல்லூரிக்கு (மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு) பின்னால் 6 அடி நீளமுள்ள பாம்பு ஓன்று ஓட்டு எண்ண அமைத்துள்ள அறையை நோக்கிச் சென்றது. இதனை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த போலீசார் பார்த்து கீழே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

           இதற்கிடையே கல்லூரி வளாகத்தில் பாம்பு புகுந்தை அறிந்த மாணவர்கள் அங்கு திரண்டனர். கூட்டத்தை கண்டு மிரட்சியடைந்த பாம்பு அப்பகுதியில் இருந்த புதரில் பதுங்கியது. இந்த சம்பவத்தினால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது தகவலறிந்த வன உயிரின ஆர்வலரான பூனம்சந்த் விரைந்து வந்து, புதரில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து எடுத்துச் சென்றார். அதன்பிறகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புக முயன்ற சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Read more...

புதன், 4 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மே 13, காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்

கடலூர்:
 
            வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் நடைபெறும் வெற்றி ஊர்வலங்கள், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார்.  13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை கூறியது:  

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கு கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு, பு.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரியிலும், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 5 மணி முதல் முன்னேற்பாடுகள் தொடங்கும். பொது மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணுவோர் நியமிக்கப்படுவர்.  

             தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்குகள் காலை 8-30 மணிக்கும் தொடங்கும். வாக்கு எண்ணிக்கையில் 300 பேர் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் பணிபுரிவர். வாக்கு எண்ணும் அலுவலர்கள் 13-ம் தேதி காலையில்தான் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுபவர். குலுக்கல் முறையில்தான் வாக்குப் பதிவு இயந்திரங்களும் மேஜைகளில் கொண்டு வந்து வைக்கப்படும்.  

             வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் முகவர் பணிக்கு வருவோர், காலை 7 மணிக்கே புகைப்படத்துடன் விண்ணப்பத்தை அளித்துவிட வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், உள்ளாaட்சி அமைப்புகளின் தலைவர்கள், அரசு ஊழியர்கள் முகவர்களாக நியமிக்கப்படக்கூடாது. முகவர்கள், வாக்கு எண்ணும் பணிபுரிவோர், வாக்கு எண்ணிக்கை தொடங்கு முன், ரகசியம் காக்க, உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ரகசியம் காக்கத் தவறினால், 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.  

            வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப் கேமராவிலும் விடியோவிலும் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 200 மீட்டர் வரைதான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் 100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் குடிபோதையில் இருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் பால்பாயின்ட் பேனா மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்படுவர். ஊற்றுப்பேனா, கூர்மையான ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

            100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படும் பார்வையாளர்களும் குடிபோதையில் இருந்தால் அப்புறப்படுத்தப்படுவர். இதுவரை 2,064 தபால் வாக்குகள் இதுவரை வாக்குப் பெட்டிகளில் போடப்பட்டு உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டதும் வாணவெடிகள், பட்டாசுகள் வெடித்தல், சாப்பாடு போடுதல், வெற்றி ஊர்வலங்கள் நடத்துதல் போன்ற செலவினங்களும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். அதனால்தான் வேட்பாளர்கள் 13-6-2011 வரை செலவு கணக்கு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது என்றார் ஆட்சியர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP