கடலூர்:
பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பாராட்டினார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் 2010ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பல்கலைக் கழகத் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் வெங்கடேஸ்வரன் பொருளாதாரத்திலும், பெருமாள் தொழிற்வேதியலிலும் முதலிடம் பெற்றனர். மேலும் தொழிற்வேதியல் பாடத்தில் பாலமுருகன் 3ம் இடத்தையும், செல்வநாதன் 4ம் இடத்தையும், கார்த்திகேயன் 5ம் இடத்தையும் பெற்றனர்.
இயற்பியலில் மாணவி நாகலட்சுமி 8ம் இடத்தையும், முதுகலை கணிதத்தில் மாணவி முல்லை 5ம் இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினார்.
பின்னர் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் கூறியது:
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் பெரியார் கலைக் கல்லூரி இணைவு பெற்று 8 ஆண்டுகளில் முதல் முறையாக பல்கலைக் கழக தேர்வில் எங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் காலங்களிலும் கல்லூரி மாணவர்களை முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் எம்.எஸ்சி., வேதியில், இயற்பியல், விலங்கியல் மற்றும் எம்.ஏ., வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தெரிவித்தார்.
Read more...