கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்
கடலூர் :
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார், டாக்டர் வித்யாசங்கர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக