கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் வகுப்பறையில் பூச்சி மருந்து சாப்பிட்டதால் திடீர் பரபரப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், ஆசிரியர் முன்னிலையில் வகுப்பறையில் மாணவர் பூச்சி மருந்து சாப்பிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் ராம்குமார் (21). இவர் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி.,தாவரவியல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கியுள்ளார். இவர் வகுப்பிற்கு ஒழுங்காக வராததால் பேராசிரியர் கண்டித்துள்ளார்.
இதனால் ராம்குமார் வகுப்பறையில் ஆசிரியர் முன்னிலையில் பூச்சிமருந்தை சாப்பிட்டார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக