ரத்ததான முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரத்ததான முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 அக்டோபர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒரே நாளில் 150 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்

கடலூர் :

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒரே நாளில் 150 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (03.10.2013) அன்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் ரத்த தானம் வழங்கினர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 27 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் மாணவர் பேரவையின் முன்னாள் செயலர் வாஞ்சிநாதனுக்கு பாராட்டு விழா



கடலூர் :


    கடலூர் பெரியார் கலைக்  கல்லூரியின் மாணவர் பேரவையின் முன்னாள் செயலர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 18 ஆண்டுகளில் 33 முறை ரத்ததானம் செய்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி கடலூர் பெரியார் கல்லூரி பிற்பட்டோர் நல விடுதி மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாணவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். சங்கரநாராயணன், குபேந்திரன், கோதண்டபாணி முன்னிலை வகித்தனர். ஜெயபால் வரவேற்றார். தொடர்ந்து ரத்ததானம் செய்து வரும் வாஞ்சிநாதனை விடுதி மாணவர்கள் சார்பில் பாராட்டி கவுரவித்தனர். பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆரோக்கிய அருள்தாஸ் நன்றி கூறினார்.



Read more...

வெள்ளி, 2 மார்ச், 2012

கடலூர் பெரியார் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் ரத்ததான முகாம் ஏ

கடலூர் மார்ச் 1:

முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த தினம் கடலூரில் தி.மு.க.வினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாணவர் அணியினர் கடலூரில் புதன்கிழமை ரத்ததானம் செய்தனர். மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் நடத்திய ரத்ததான முகாமுக்கு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கு.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். பெரியார் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் அன்புதாசன், கிருஷ்ணராஜ், ராகவன், சிவதாசன், விக்னேஸ்வரி, விஜி, ராமு, புருஷோத்தமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

திங்கள், 28 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார், டாக்டர் வித்யாசங்கர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP