அடிப்படை வசதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடிப்படை வசதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டம்

கடலூர் :
 
          கடலூர்  பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
         கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரி எதிரில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. அது தரமாக இல்லாததாலும், விடுதியில் கழிவறை சுத்தம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராமலிங்கம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உணவு தரமாக வழங்குவதாகவும், பிற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று மாணவர்கள் காலை 11 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.

Read more...

செவ்வாய், 6 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சுகாதாரமற்ற உணவு

கடலூர்:
 
     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள், சுகாதாரமற்ற உணவைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

           கல்லூரிக்கு அருகில் உள்ள  மாணவர்கள் விடுதியில் 105 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்கிறார்கள் மாணவர்கள் .தானே புயலில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்படவில்லை. உணவு தரமானதாகவும் சுகாதாரமாகவும் இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை என்கிறார்கள்.

        இந்நிலையில் திங்கள்கிழமை வழங்கப்பட்ட காலை உணவு, சுதாரமற்ற நிலையிலும் துர்நாற்றத்துடனும், புழுப் பூச்சிகளுடனும் மிகமோசமாக இருந்ததாம். எனவே விடுதி மாணவர்கள் காலை உணவைப் புறக்கணித்து, கல்லூரி வகுப்புகளையும் பறக்கணித்தனர். பின்னர் விடுதி வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் பிற்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் பழநி மற்றும் கடலூர் வட்டாட்சியர் எழிலன் ஆகியோர் விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

       பிற்பட்டோர் மாணவர் விடுதியைச் சீரமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கி இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், சுகாதாரமான உணவு வழங்கப்படும் என்றும் வட்டாசியர் பழநி உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்துச் சென்றனர்.

Read more...

திங்கள், 28 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

               கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு தனியாக விடுதி வசதி உள்ளது. இங்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விடுதியில் ஆங்காங்கே மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் தங்குவதற்கு சிரமமாக உள் ளது. ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளதால் சாரைக் காற்று உள்ளே வீசுகிறது. 

            மேலும், மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read more...

வெள்ளி, 7 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

கடலூர்:

                கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

            கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின், மாணவிகள் பிரிவு பேரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கல்லூரியில் இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

            ஈரோடு மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் கனிமொழி, சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.துளசி, மாவட்டச் செயலாளர் டி.அரசன் உள்ளிட்டோரும் பேசினர்.  புதிய நிர்வாகிகள் தேர்தலில் கல்லூரியின் கிளைத் தலைவராக எஸ்.ரம்யா, செயலாளராக புவனேஸ்வரி மற்றும் 13 பேர் அடங்கிய நிர்வாக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.

Read more...

வியாழன், 3 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர் : 

                அடிப்படை வசதி கோரி அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 105 பேர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் இல்லை. தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று விடுதியில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வார்டன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நடவடிக்கை மேற்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்தனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP