கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடலூர் :
அடிப்படை வசதி கோரி அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 105 பேர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் இல்லை. தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று விடுதியில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வார்டன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நடவடிக்கை மேற்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக