ஆட்சிமொழிப் பயிலரங்கம் : கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு
கடலூர் :
கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் ஊரக வளர்ச்சி அலுவலக அரங்கில் நடந்தது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமணன் (ஓய்வு) தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உமா வரவேற்றார். கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் நடராஜன் "மொழிப் பயிற்சி' தலைப்பிலும், ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர் ராம முத்துக்குமரனார் "ஆட்சி மொழி ஆய்வும், குறைகளும்' தலைப்பிலும் பேசினர். பயிலரங்கில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக