வியாழன், 21 அக்டோபர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கடலூர்:

                  டலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு புதன்கிழமை வழங்கினார்.  

                  பெரியார் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் 80 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் மாலை நேரங்களில் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருந்தனர்.மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கெய்க்வாட் பாபு, கிரிக்கெட் மட்டை, பந்து, வாலிபால் நெட், பந்து, கேரம் போர்டு, செஸ் இறகுப் பந்து, வலை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை, விடுதிக்குச் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்

கடலூர்:

                 ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

                  பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில், தமிழக வரலாற்றுப் பேரவை 17-வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோயில் சிற்பக்கலை, திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில்- வரலாற்றுப் பார்வை, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் கல்வெட்டுகள், வள்ளலாரின் வாழ்க்கை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்- சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கூட்டத்தின்போது இந்த ஆய்வுக் கட்டுரைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

                    கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் காந்திமதியின் வழிகாட்டுதல்படி, அத்துறை பேராசிரியர்கள் விஜயலட்சுமி, நா.சேதுராமன் ஆகியோர், மாணவர்களைத் தயார் செய்து, பொள்ளாச்சி வரலாற்றுப் பேரவை கூட்டத்துக்கு அழைத்துச் சென்று இருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களை கல்லூரியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா

கடலூர் : 

                     கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் தாவரவியல் மன்ற துவக்க விழா மற்றும் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தாவரவியல் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் வரவேற்றார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் ராமானுஜம் செம்மொழி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்து "உயிர் பல் மயம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேராசிரியர்கள் பாவாடை, அருணா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிரகாஷ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

Read more...

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

கடலூர்:

                 கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி 2-ம் சுழற்சி (கௌரவ விரிவுரையாளர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்தனர்.

                       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2-ம் சுழற்சியில் 700 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆண்டுதோறும் கெüரவ விரிவுரையாளர்களை அரசு நியமிக்கிறது. இந்த ஆண்டு கௌரவ விரிவுரையாளர்கள் 35 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், கௌரவ விரிவுரையாளர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்தனர். 

                        இதுவரை தர வேண்டிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கௌரவ விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, திங்கள்கிழமை 2-வது சுழற்சி மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.

Read more...

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


கடலூர்:

                 கடலூர் பெரியார்  கலைக்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

               இக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த மாணவர் ராஜ்குமார் அண்மையில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவரது மறைவுக்கு கல்லூரியின் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னையில் தற்போது கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.  அவர் முறையாகப் பாடம் நடத்துவது இல்லை என்பது உள்ளிட்ட புகார்களை தெரிவித்து மாணவர்களில் ஒரு பிரிவினர் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளைப் புறக்கணித்தனர்.

                 புதன்கிழமை இதே பிரச்னை காரணமாக 30 மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துக் கலைந்து சென்றனர்.





Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP