கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த மாணவர் ராஜ்குமார் அண்மையில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவரது மறைவுக்கு கல்லூரியின் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னையில் தற்போது கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அவர் முறையாகப் பாடம் நடத்துவது இல்லை என்பது உள்ளிட்ட புகார்களை தெரிவித்து மாணவர்களில் ஒரு பிரிவினர் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளைப் புறக்கணித்தனர்.
புதன்கிழமை இதே பிரச்னை காரணமாக 30 மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துக் கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக