கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
கடலூர்:
கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு புதன்கிழமை வழங்கினார்.
பெரியார் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் 80 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் மாலை நேரங்களில் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருந்தனர்.மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கெய்க்வாட் பாபு, கிரிக்கெட் மட்டை, பந்து, வாலிபால் நெட், பந்து, கேரம் போர்டு, செஸ் இறகுப் பந்து, வலை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை, விடுதிக்குச் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக