கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா
கடலூர் :
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் தாவரவியல் மன்ற துவக்க விழா மற்றும் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தாவரவியல் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் வரவேற்றார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் ராமானுஜம் செம்மொழி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்து "உயிர் பல் மயம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் பாவாடை, அருணா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிரகாஷ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக