கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்து துன்புறுத்துவதை தடுக்கும் பொருட்டும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போலீஸ் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் 25/08/2012 அன்று நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி பேராசிரியர் (பொறுப்பு) ஜெயந்திதேவி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., சுந்தரவடிவேல், புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், இத்தவறை செய்வோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். மேலும், மாணவர்கள் அனைவரும் நட்புடன் பழக வலியுறுத்தினர்.