சனி, 25 ஆகஸ்ட், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை வழங்ககோரி மாலை நேர வகுப்பு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர் :


    இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை வழங்ககோரி  பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

       கடலூரில் தேவனாம்பட்டினம்   பெரியார் கலைக் கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்.சி, எம்.ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். காலை, மாலை என இரு பிரிவாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 3 மாத காலமாக இலவச பஸ் பாஸ் வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். பஸ் பாஸ் கடலூர் நகரோடு மட்டுமல்லாமல் கல்லூரி அமைந்துள்ள தேவனாம்பட்டினம் வரை மாணவர்கள் வந்து- செல்லத்தக்க வகையில் வழங்க வேண்டும். கல்வி உதவி தொகை பெறும் மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட தொகை வழங்க வேண்டும்.

           கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் மாணவ- மாணவிகள் நலன் கருதி சுற்று சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகுப்பு மாணவ- மாணவிகள் கடந்த 13ம் தேதி முதல் 3 முறை வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் காலை நேர வகுப்பில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ் மற்றும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் மாலை நேர வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் நிலை குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று மாலை நேர வகுப்புகளுக்கு வந்த மாணவ- மாணவிகள் சுமார் 700 பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

        தகவலறிந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு நலத்திட்டங்கள் விடுபட்ட மாணவ- மாணவி களுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


 

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP