கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும்
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்க வேண்டிய 634 ஸ்மார்ட் கார்டுகள் விரைவில் வழங்கப்படும் என கடலூர் மண்டல பொது மேலாளர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) பிரிவு கடலூர் மண்டல பொது மேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள விளக்கம்:
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மணவியர்களுக்கு இக் கல்வியாண்டில் 2012-13 அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்வதற்குமொத்தம் 2,580 விண்ணப்பங்கள்வழங்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 1,381 வரப்பெற்று இப்போக்குவரத்துக் கழக பணிமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 744 ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்து, மாணவ, மாணவியருக்கு வழங்கும் பொருட்டு இக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டு விட்டன. மீதி வழங்கப்பட வேண்டிய ஸ்மார்ட் கார்டுகள் 637ம் விரைவில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக