கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரி மாணவர்கள், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை உடன் வழங்க வேண்டும். மூன்றாமாண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசின் இலவச பஸ் பாஸ் கிராமங்களில் இருந்து கடலூர் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் கடலூரில் இருந்து கல்லூரிக்கு மாணவர்கள் வர சிரமமாக உள்ளதால், மாணவர்கள் கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக