வியாழன், 28 ஜூலை, 2011
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கபடி அணி கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டியில் இரண்டாம் இடம்
ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணத்தில் பி.பி.ஜெ., கல்லூரியில் நடந்த கபடி போட்டியில் கடலூர் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி நடந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. கடலூர் செயின்ட்ஜோசப் கல்லூரி அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. 2ம் இடத்தை கடலூர் பெரியார் கலைக் கல்லூரி அணியும், கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ் கல்லூரி 3ம் இடத்தையும், விருத்தாசலம் ராமதாசு கல்லூரி 4ம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.பி.ஜெ., கல்லூரி நிறுவனர் பத்மநாபன் கோப்பை வழங்கினார். கல்லூரி நிர்வாகி பிரகாஷ், முதல்வர் தெய்வநாயகம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், ரமேஷ் பங்கேற்றனர்.
லேபிள்கள்:
கபடி போட்டி,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
பெரியார் கலைக் கல்லூரி
புதன், 27 ஜூலை, 2011
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் சமச்சீர் புத்தகம் கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் சமச்சீர் புத்தகம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க, கடலூர் நகரச் செயலர் ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அரசன் தொடங்கி வைத்தார். நகரத் தலைவர் இளங்கோ, கல்லூரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் புரட்சிநாதன், அழகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் 1,000க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் 1,000க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம்,
சமச்சீர் கல்வி,
பெரியார் கலைக் கல்லூரி
செவ்வாய், 26 ஜூலை, 2011
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்தி வைப்பு
கடலூர் :
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"முதலாமாண்டு பி.ஏ.,- பி.எஸ்சி., - பி.காம்., வகுப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (27ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
கலந்தாய்வு,
பெரியார் கலைக் கல்லூரி,
மாணவர் சேர்க்கை,
Periyar Arts College
வெள்ளி, 22 ஜூலை, 2011
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி வகுப்பு புறக்கணிப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி வகுப்புககளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முன்பு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம்,
சமச்சீர் கல்வி,
வகுப்பு புறக்கணிப்பு
புதன், 13 ஜூலை, 2011
கடலூர் பெரியார் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா
கடலூர் :
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பேராசிரியர்கள் விளக்கினர்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி பேசுகையில்,
மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் பேராசிரியர்கள் கல்வியை போதிப்பார்கள். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். விழாவில் வரலாற்று பேராசிரியர் காந்திமதி உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
வெள்ளி, 1 ஜூலை, 2011
Cuddalore Periyar Arts College Students participate in campaign for blood donation
A State-wide mobile campaign for blood donation in Cuddalore on Wednesday.
CUDDALORE:
Blood is a vital fluid for the living as well as those struggling for life after an emergency such as an accident or a surgery. Its importance will be felt when there is a chronic need for blood and a frantic search for the suitable blood group to save a life, said U.Tamilarasi, a second-year undergraduate student in the Periyar Government Arts College here.
She reflects the concern shown by the youth in general for those who are in a critical condition to require blood transfusion. Ms. Tamilarasi was one among the group of students who turned up at Anna Stadium on Wednesday to become part of the State-wide campaign for blood donation, launched jointly by the Tamil Nadu AIDS Control Society and the National Blood Transfusion Council in connection with World Blood Donor Day (observed on June 14).
A National Service Scheme volunteer, Ms. Tamilarasi had come forward to donate blood for the first time. She dismissed the notion that blood donation would sap energy because the body would recoup the requisite quantity of blood within 36 hours. Her classmate S.Krishnaveni too was of the view that by taking nutritious food the donated blood could be replenished. It was a soothing thought for them that the donated blood would save the life of someone, somewhere. They would not mind donating blood whenever called for.
For S.Muthukumaran, final-year diploma student of Krishnaswamy Polytechnic College, it was the maiden blood donation. Soon after donating blood, he munched biscuits and gulped down the soft drink and a bottle of drinking water supplied by the organisers.
Two ultramodern air-conditioned buses equipped with pushback cushioned seats and cold storage facilities are touring the State, in two different directions — south and north — to collect blood from voluntary donors ever since June 14, and the trip would culminate in Chennai on July 2. A medical team is being deployed from the district headquarters government hospital to collect the blood from the donors, and at the end of the day, the entire collection would be handed over to the hospital concerned. From men, 350 ml of blood and from women 300 ml of blood each is being extracted.
S.Vidyasankar, Medical Officer (Blood Bank), told The Hindu that after the blood swabs were collected by using fresh needle for each candidate, the blood grouping was determined. Those in the age group of 18 to 65 years, weighing 45 kg and above, and having Hb count of 12 gm/dl and a blood pressure of 90/60 to 160/100 could donate blood once in three months in the case of male and once in four months in case of female (Because of the menstrual cycle it might require one more month for women to recoup the blood). Dr. Vidyasankar further said that after a thorough screening blood free from the symptoms of five diseases such as HIV, HBsAg and HAC (two types of hepatitis), malaria and VDRL (venereal diseases) would be put to use.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)