கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி வகுப்பு புறக்கணிப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி வகுப்புககளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முன்பு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக