கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் சமச்சீர் புத்தகம் கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் சமச்சீர் புத்தகம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க, கடலூர் நகரச் செயலர் ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அரசன் தொடங்கி வைத்தார். நகரத் தலைவர் இளங்கோ, கல்லூரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் புரட்சிநாதன், அழகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் 1,000க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக