வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி

கடலூர்:

                கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடந்தது.  

             மாவட்ட உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் க.ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், என்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  

                  மாணவர்களுக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், ஆலோசகர் கவிஞர் பால்கி, பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் ஆகியோர் நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் பங்கேற்ப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி,  மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். 

                போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Read more...

வியாழன், 24 பிப்ரவரி, 2011

உளவியல் துறை கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு

கடலூர் : 

           கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. "தேசிய அளவில் மனித உரிமை நிகழ்வுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். 

            சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் சேதுராமன் முதல் அமர்விற்கும், திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியர் தனிஸ்தாஸ் இரண்டாம் அமர்விற்கும் தலைமை வகித்தனர். நிறைவு விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் பரிசு வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னப்பன், அந்தோணிராஜ், ஜெயராஜ், ரூபி வயலட்ராணி, திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி செய்திருந்தனர்.

Read more...

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம்

கடலூர்:
 
             துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று, கடலூர் தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
               ராணி மேரி கல்லூரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் கடலூர் மத்திய சிறையில் 13 நாள்கள் அடைக்கப்பட்டு இருந்தார். இதேபோல் மு.க. ஸ்டாலின் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளுக்கும் கடலூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும். 
 
 மாவட்டம் முழுவதும் கிராமங்கள்தோறும் மாணவரணியினர் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது. 
 
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், 
 
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல், 
 
அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்தல், 
 
மருத்துவ முகாம்கள் நடத்துதல், 
 
மரங்கள் நடுதல், 
 
மாணர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், 
 
விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் 
 
உள்ளிட்ட பணிகளைச் செய்வது, 
 
மாவட்டம் முழுவதும் சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது, 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதிக்கு எதிராவும் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
                 கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைபபாளர் கு,வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வேல்முருகன், குபேந்திரன், விஜயகுமார், சிவா, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

திங்கள், 14 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வேதியியல் கண்காட்சியில் பங்கேற்ப்பு

கடலூர்:

        கடலூர் கந்தசாமி நாயுடு  மகளிர் கல்லூரியில் வேதியியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 கல்லூரி மாணவர்கள்  பங்கேற்றனர்.



Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP