செவ்வாய், 25 ஜனவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுச் சொற்பொழிவு

கடலூர் : 

            கடலூரில் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்று துறை சார்பில் வரலாற்று பேரவை மாதாந்திரப் சிறப்பு சொற்பொழிவு அண்ணா நூற்றாண்டு விழா நினைவு கட்டடத்தில் நடந்தது. 

                 பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் காந்திமதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராயப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ரங்கராஜ் வள்ளலாரும் வாழ்வியலும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் டாக்டர் சேதுராமன், பிரபா, சிவகாமசுந்தரி, விஜயலட்சுமி, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் கார்த்திக் நன்றி கூறினார்.

Read more...

வியாழன், 6 ஜனவரி, 2011

கடலூர் மண்டல பூப்பந்து விளையாட்டுப் போட்டி: பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ப்பு

கடலூர் : 

            திருவள்ளுவர் பல்கலைக் கழக கடலூர் மண்டல அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டி கடலூரில் நடந்தது. 

            ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக் கல்லூரி, செய்யாறு இந்தியன் அமெரிக்கன் கல்லூரி, புதுச்சேரி கல்லூரிகள் பங்கேற்றன. 

             பெண்கள் பிரிவு போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் சார்பில் அணிகள் பங்கேற்றன. 

               இதில் ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
 
              போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் செய்திருந்தார். உடற் கல்வி இயக்குனர்கள் வண்ணமுத்து, புவனேஸ்வரி போட்டிகளை நடத்தினர்.

Read more...

வியாழன், 21 அக்டோபர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கடலூர்:

                  டலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு புதன்கிழமை வழங்கினார்.  

                  பெரியார் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் 80 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் மாலை நேரங்களில் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருந்தனர்.மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கெய்க்வாட் பாபு, கிரிக்கெட் மட்டை, பந்து, வாலிபால் நெட், பந்து, கேரம் போர்டு, செஸ் இறகுப் பந்து, வலை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை, விடுதிக்குச் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்

கடலூர்:

                 ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

                  பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில், தமிழக வரலாற்றுப் பேரவை 17-வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோயில் சிற்பக்கலை, திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில்- வரலாற்றுப் பார்வை, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் கல்வெட்டுகள், வள்ளலாரின் வாழ்க்கை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்- சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கூட்டத்தின்போது இந்த ஆய்வுக் கட்டுரைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

                    கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் காந்திமதியின் வழிகாட்டுதல்படி, அத்துறை பேராசிரியர்கள் விஜயலட்சுமி, நா.சேதுராமன் ஆகியோர், மாணவர்களைத் தயார் செய்து, பொள்ளாச்சி வரலாற்றுப் பேரவை கூட்டத்துக்கு அழைத்துச் சென்று இருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களை கல்லூரியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா

கடலூர் : 

                     கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் தாவரவியல் மன்ற துவக்க விழா மற்றும் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தாவரவியல் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் வரவேற்றார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் ராமானுஜம் செம்மொழி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்து "உயிர் பல் மயம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேராசிரியர்கள் பாவாடை, அருணா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிரகாஷ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP