கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு
கடலூர் :
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடந்தது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் சென்னை தாய் மரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களின் தனி திறனை மேம்பாடுத்துவதற்காக மாதிரி நேர்முக தேர்வு மூன்று நாள் நடைபெற்றது. பயிற்சி வகுப்யில் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவர்கள் 800 பேர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மாதிரி நேர்காணல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு கடலூர் டி.எஸ்.பி., வனிதா சான்றிதழ் வழங்கினார். வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியின் பொறுப்பாளரான பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயந்திதேவி, கண்ணன், மனோகரன், சிவக்குமார் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக