கடலூர் பெரியார் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் ரத்ததான முகாம் ஏ
கடலூர் மார்ச் 1:
முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த தினம் கடலூரில் தி.மு.க.வினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாணவர் அணியினர் கடலூரில் புதன்கிழமை ரத்ததானம் செய்தனர். மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் நடத்திய ரத்ததான முகாமுக்கு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கு.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். பெரியார் கல்லூரி தி.மு.க. மாணவர் அணியினர் அன்புதாசன், கிருஷ்ணராஜ், ராகவன், சிவதாசன், விக்னேஸ்வரி, விஜி, ராமு, புருஷோத்தமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக