கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் மாணவர் பேரவையின் முன்னாள் செயலர் வாஞ்சிநாதனுக்கு பாராட்டு விழா
கடலூர் :
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் மாணவர் பேரவையின் முன்னாள் செயலர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 18 ஆண்டுகளில் 33 முறை ரத்ததானம் செய்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி கடலூர் பெரியார் கல்லூரி பிற்பட்டோர் நல விடுதி மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாணவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். சங்கரநாராயணன், குபேந்திரன், கோதண்டபாணி முன்னிலை வகித்தனர். ஜெயபால் வரவேற்றார். தொடர்ந்து ரத்ததானம் செய்து வரும் வாஞ்சிநாதனை விடுதி மாணவர்கள் சார்பில் பாராட்டி கவுரவித்தனர். பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆரோக்கிய அருள்தாஸ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக