கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின், மாணவிகள் பிரிவு பேரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லூரியில் இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் கனிமொழி, சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.துளசி, மாவட்டச் செயலாளர் டி.அரசன் உள்ளிட்டோரும் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்தலில் கல்லூரியின் கிளைத் தலைவராக எஸ்.ரம்யா, செயலாளராக புவனேஸ்வரி மற்றும் 13 பேர் அடங்கிய நிர்வாக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக