ஆதிதிராவிடர் விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதிதிராவிடர் விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 செப்டம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதிதிராவிட விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர்:
     கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள்  விடுதியில் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் வழங்கப்பட்ட உணவு சுகாதாரமாக இல்லை என மாணவர்கள் உணவை  சாப்பிடாமல் புறக்கணித்தனர். மேலும் விடுதியில் கழிவறை, குளியலறை, சமையலறை ஆகியவைகளை முறையாக பராமரிக்காததை கண்டித்து ஆனந்தராஜ், செந்தில் ஆகியோர் தலைமை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

             தகவலறிந்த கடலூர்  ஆதிதிராவிடர் நலத் துறை தாசில்தார் சரவணன், மாணவர்களிடம் பேச்சுவார்தை  நடத்தி இனி சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டு மாணவர்கள் கல்லூரி சென்றனர்.

Read more...

வியாழன், 22 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டம்

கடலூர் :
 
          கடலூர்  பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்கள் தரமான உணவு வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
         கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரி எதிரில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. அது தரமாக இல்லாததாலும், விடுதியில் கழிவறை சுத்தம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராமலிங்கம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உணவு தரமாக வழங்குவதாகவும், பிற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று மாணவர்கள் காலை 11 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.

Read more...

திங்கள், 28 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

               கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு தனியாக விடுதி வசதி உள்ளது. இங்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விடுதியில் ஆங்காங்கே மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் தங்குவதற்கு சிரமமாக உள் ளது. ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளதால் சாரைக் காற்று உள்ளே வீசுகிறது. 

            மேலும், மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP