வெள்ளி, 29 மே, 2015

அரசு பெரியார் கலைக்கல்லூரியில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்


கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
தினமணி - 29.05.2015

கலை, அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால், கடலூர் அரசுக் கல்லூரியில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடலூரில் அரசு பெரியார் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி நிறைவடைந்தது. ஒவ்வொரு நாளும் பாடம் வாரியாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பங்கேற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதாக கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பாக தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், புள்ளியல், கணினிஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டில் 1,065 இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 4,390 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. கலந்தாய்வில் 3,450 பேர் பங்கேற்றனர். இதுவரையில் இல்லாத அளவாக கலந்தாய்வின் முதல் கட்டத்திலேயே வணிகவியல், கணினிஅறிவியல், கணிதப் பாடங்களில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. மற்ற பாடங்களில் 75 சதவீத இடங்கள் நிரப்பியுள்ளன. கடந்த காலங்களில் முதல் கட்ட கலந்தாய்வில் அதிகபட்சமாக 50 சதவீத இடங்கள் வரையில் தான் நிரப்பும்.
இது மாணவர்களிடம் கலை, அறிவியல் பாடத்துக்கு வரவேற்பு இருப்பதையே காட்டுகிறது. வேலைவாய்ப்பு உறுதியாக உள்ள படிப்புகளாக இளநிலை பட்டப்படிப்புகள் மாறி வருவதோடு, குறைவான செலவில் படிப்பினை முடித்துவிடும் சூழ்நிலை உள்ளது.
அதே நேரத்தில் அதிக செலவில் படிக்கப்படும் பொறியியில் பட்டதாரிகள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் நிலையும் கலை அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக உள்ளது.
தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்தும், பாடத்திட்டம், அரசியல், உலக கண்ணோட்டம், ஆங்கிலம் பேசுதல், சக மாணவ, மாணவிகளுடன் நட்புறவுடன் பழகுவது குறித்து ஜூன் 2-ஆம் தேதி முதல் சிறப்பு வல்லுநர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில உயர்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
மே 29-ஆம் தேதி 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. தேவைப்படும் பட்சத்தில் 30-ஆம் தேதி 3-ஆம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படும்.
அதேபோன்று, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Halloween Comments - http://www.halloweentext.com 
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 27 மே, 2015

கடலூா், பொியாா் அரசு கலைக் கல்லூாியில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

Read more...

செவ்வாய், 26 மே, 2015

கலைக்கல்லூரிகளில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மற்றும் பி.காம். படிப்புகளுக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக கடலூர் அரசு கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் கூறினார்.

தினத்தந்தி -24.05.2015 (ஞாயிற்றுக்கிழமை)

கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கடலூர் அரசு கலைக்கல்லூரியில் 17 விதமான கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டுக்கு 1065 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இப்படிப்புகளில் சேர 4 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் அன்று விளையாட்டு வீரர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான இடஒதுக்கீடுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் பங்கேற்ற 35 பேரில் 29 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) பி.எஸ்சி.இயற்பியல், பி.எஸ்சி.வேதியியல், பி.எஸ்சி. தாவரவியல், பி.எஸ்சி. விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதுபற்றி கல்லூரி முதல்வர் விசுவநாதன் கூறியதாவது:-

பட்டப்படிப்பு

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 75 ஆயிரம் என்ஜினீயர்கள் உருவாகிறார்கள். ஆனால் நமக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் என்ஜினீயர்கள் போதுமானது. இதனால் என்ஜினீயர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை காணப்படுகிறது. அதனால் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு லட்சம் ரூபாய் செலவு செய்து பி.இ. படிப்பதை விட அரசு கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி பட்டப் படிப்பு படித்து விடலாம் என்ற எண்ணம் மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. 

ஏனெனில் சாப்ட்வேர் கம்பெனிகள், பொறியாளர்களைவிட பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்தவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளுக்கு கொடுக்கிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை பி.எஸ்.சி.பட்டதாரிகளுக்கு கொடுத்தால் போதுமானது என்பதால் பி.எஸ்.சி. பட்டதாரிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதேபோல் பிரபலமான கம்பெனிகளும் மார்க்கெட்டிங் வேலைக்கு எம்.பி.ஏ. பட்டதாரிகளை விட பி.காம். பட்டதாரிகளை தேர்ந்து எடுக்கிறார்கள். இதனால் பி.எஸ்சி.கணினி அறிவியல், பி.காம். பட்டப்படிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பி.எஸ்சி.இயற்பியல், பி.எஸ்சி.கணிதம், பி.ஏ.பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

இவ்வாறு கல்லூரி முதல்வர் விசுவநாதன் கூறினார்.  

Read more...

சனி, 23 மே, 2015

பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வியண்டிற்கான முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை துவக்கம்.

Read more...

பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வியண்டிற்கான இளநிலை பாடப்பிரிவிற்கான கலந்தாய்வு 22.03.2015 அன்று துவங்கியது.

Read more...

வியாழன், 7 மே, 2015

கடலூர் கோடை விழாவினை முன்னிட்டு பெரியார் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் “புத்தகக் கண்காட்சியில் பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி” மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தகவல்

தினமலா் 06.05.2015

தினத்தந்தி 06.05.2015

தினத்தந்தி 06.05.2015
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 5 மே, 2015

கடலூா், பொியாா் அரசு கலைக் கல்லூாியில் 2015-16-ம் கல்வியாண்டில் சேரும் மாணவா்களுக்கு 15 நாட்கள் சிறப்பு பயிற்சி இந்த கல்வியாண்டு முதல் அறிமுகம்

தினமலா் 05.05.2015 செவ்வாய்க்கிழமை

தினத்தந்தி 05.05.2015 செவ்வாய்
தினமணி 05.05.2015


Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 4 மே, 2015

கடலூா் பொியாா் கலைக் கல்லூாியில் 2015-16-ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.





 2015-16-ஆம் கல்வியாண்டிற்குரிய பெரியார் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. முதல் விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.27/- (ரூபாய் இருபத்தேழு மட்டும்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர்களுக்கு விலையில்லா விண்ணப்பம் ஒன்று வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 18.05.2015 மாலை 05.00 மணிவரை ஆகும்.
சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ரூ.22.05.2015-வெள்ளிக்கிழமையன்று  சிறப்புப்பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் பிரிவு முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் மற்றும் திருநங்கையர்) (தொழில் சார்ந்த கல்வி பயின்றவர் நீங்கலாக) 
22.05.2015-திங்களன்று கணிதம் புள்ளியியல் இயற்பியல் வேதியியல் (பொது) (பகுதி மூன்றில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டும்) கணினி அறிவியல் (பகுதி 3-ல் கணிதம் படித்தஃபடிக்காத மாணவர்கள்) 
26.05.2015-செவ்வாய்கிழமையன்று தாவரவியல் விலங்கியல் நுண்ணுயிரியல் வேதியியல் (தொழில்முறை) (கணிதம் படித்த/படிக்காத மாணவர்கள்) வணிகவியல் (பொது) தொழில்முறை பயின்றவர்கள் 
27.05.2015-புதன்கிழமையன்று பொருளியல் வரலாறு அரசியல் அறிவியல் தமிழ் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 29.05.2015-வெள்ளிக்கிழமையன்றும் மேலும் காலியிடங்கள் இருப்பின் 30.05.2015-மூன்றாம் மற்றும் இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெறும்.









கடலூர் மாவட்ட செய்திகள்
Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP