கலைக்கல்லூரிகளில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மற்றும் பி.காம். படிப்புகளுக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக கடலூர் அரசு கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் கூறினார்.
தினத்தந்தி -24.05.2015 (ஞாயிற்றுக்கிழமை)
கல்லூரிகளில்
மாணவர்சேர்க்கை
தமிழகத்தில் பிளஸ்-2
தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கலைக்கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கடலூர் அரசு கலைக்கல்லூரியில் 17 விதமான கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில்
வரும் கல்வி ஆண்டுக்கு 1065 மாணவர்கள் சேர்க்கப்பட
உள்ளனர். இப்படிப்புகளில் சேர 4 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதையடுத்து மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் அன்று
விளையாட்டு வீரர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின்
குழந்தைகளுக்கான இடஒதுக்கீடுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் பங்கேற்ற 35
பேரில் 29 மாணவர்களுக்கு இடங்கள்
ஒதுக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) பி.எஸ்சி.இயற்பியல், பி.எஸ்சி.வேதியியல், பி.எஸ்சி. தாவரவியல்,
பி.எஸ்சி. விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு
நடைபெற்றது. இதுபற்றி கல்லூரி முதல்வர் விசுவநாதன் கூறியதாவது:-
பட்டப்படிப்பு
தமிழ்நாட்டில்
பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 75
ஆயிரம் என்ஜினீயர்கள் உருவாகிறார்கள். ஆனால் நமக்கு ஒவ்வொரு
ஆண்டும் 30 ஆயிரம் என்ஜினீயர்கள் போதுமானது. இதனால்
என்ஜினீயர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை காணப்படுகிறது. அதனால்
பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 1½ லட்சம் ரூபாய் செலவு
செய்து பி.இ. படிப்பதை விட அரசு கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி பட்டப் படிப்பு படித்து விடலாம் என்ற எண்ணம்
மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.
ஏனெனில் சாப்ட்வேர்
கம்பெனிகள், பொறியாளர்களைவிட பி.எஸ்.சி. கணினி அறிவியல்
படித்தவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளுக்கு கொடுக்கிற
சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை பி.எஸ்.சி.பட்டதாரிகளுக்கு கொடுத்தால்
போதுமானது என்பதால் பி.எஸ்.சி. பட்டதாரிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி
அளித்து பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதேபோல் பிரபலமான கம்பெனிகளும்
மார்க்கெட்டிங் வேலைக்கு எம்.பி.ஏ. பட்டதாரிகளை விட பி.காம். பட்டதாரிகளை தேர்ந்து
எடுக்கிறார்கள். இதனால் பி.எஸ்சி.கணினி அறிவியல், பி.காம்.
பட்டப்படிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக
பி.எஸ்சி.இயற்பியல், பி.எஸ்சி.கணிதம், பி.ஏ.பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக வரவேற்பு
உள்ளது.
இவ்வாறு கல்லூரி
முதல்வர் விசுவநாதன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக