கடலூா் பொியாா் கலைக் கல்லூாியில் 2015-16-ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.
2015-16-ஆம் கல்வியாண்டிற்குரிய பெரியார் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. முதல் விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.27/- (ரூபாய் இருபத்தேழு மட்டும்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர்களுக்கு விலையில்லா விண்ணப்பம் ஒன்று வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 18.05.2015 மாலை 05.00 மணிவரை ஆகும்.
சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ரூ.22.05.2015-வெள்ளிக்கிழமையன்று சிறப்புப்பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் பிரிவு முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் மற்றும் திருநங்கையர்) (தொழில் சார்ந்த கல்வி பயின்றவர் நீங்கலாக)
22.05.2015-திங்களன்று கணிதம் புள்ளியியல் இயற்பியல் வேதியியல் (பொது) (பகுதி மூன்றில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டும்) கணினி அறிவியல் (பகுதி 3-ல் கணிதம் படித்தஃபடிக்காத மாணவர்கள்)
26.05.2015-செவ்வாய்கிழமையன்று தாவரவியல் விலங்கியல் நுண்ணுயிரியல் வேதியியல் (தொழில்முறை) (கணிதம் படித்த/படிக்காத மாணவர்கள்) வணிகவியல் (பொது) தொழில்முறை பயின்றவர்கள்
27.05.2015-புதன்கிழமையன்று பொருளியல் வரலாறு அரசியல் அறிவியல் தமிழ் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 29.05.2015-வெள்ளிக்கிழமையன்றும் மேலும் காலியிடங்கள் இருப்பின் 30.05.2015-மூன்றாம் மற்றும் இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெறும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக