வெள்ளி, 21 நவம்பர், 2014
சனி, 8 நவம்பர், 2014
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கடலூர் பெரியார்கலைக் கல்லூரியில் 2015 ஜனவரி பகுதிக்கான (January Session-2015) முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவா் சோ்க்கைக்காண வி்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கடலூர் பெரியார்கலைக் கல்லூரியில் 2015 ஜனவரி பகுதிக்கான (January Session-2015) முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி) மேற்கொள்ளத் தகுதியுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முனைவர்பட்ட ஆய்வு (பிஎச்.டி) மேற்கொள்ளத் தமிழ்த்துறை மற்றும் தாவரவியல் துறையில் முழுநேரம் மற்றும் பகுதிநேரங்களிலும் வணிகவியல் துறையில் பகுதிநேரத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாணவர் சேர்க்கையானது திருவள்ளுவர் பல்கலைக் கழக முனைவர் பட்டமாணவர் சேர்க்கைவிதி முறைகளின்படி நடைபெறும். விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்துசேரக் கடைசிநாள் 10.12.2014. மேலும் விபரங்களுக்குக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட துறைத் தலைவர்களையோ நேரில் அணுகித் தெரிந்துகொள்ளலாம்.
தினமணி-10.11.2014
பெரியார் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு
கடலூர் அரசு பெரியார் கலை,
அறிவியல் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி
பகுதிக்கான, முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி.) படிப்புக்கு
தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தாவரவியல் துறையில் முழு நேரம்
மற்றும் பகுதி நேரங்களிலும், வணிகவியல் துறையில் பகுதி
நேரத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேர வரும் டிசம்பர் 10ஆம்
தேதி கடைசி நாள்.
மேலும், விவரங்களுக்கு கல்லூரி
முதல்வர் அல்லது துறைத் தலைவர்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி
முதல்வர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தினமலா் 10.11.2014 திங்கள் கிழமை |
கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் பெரியார் அரசு கல்லூரிக்கு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லூரி நுகர்வோர் மன்றங்களில் முதல்பரிசு பெற்றது.
தினகரன் 08.11.2014 சனிக்கிழமை
கடலூரில் நடந்த அரசு விழாவில் நுகர்வோர் அமைப்புகள் வெளிநடப்பு
கடலூர், : கடலூரில் நடந்த அரசு விழாவில்,
பெயரளவில்
மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி நுகர்வோர் அமைப்புகள் விழாவை
புறக்கணித்தன.
ஐக்கிய நாடுகள்
பிரகடனத்தின்படி மார்ச் 15ம் நாள் உலக நுகர்வோர் உரிமை தினம் நடத்தப்பட
வேண்டும். பல்வேறு காரணங்களால் இவ்விழா நடத்தப்படாமல் நேற்று கடலூர் டவுன்ஹாலில்
விழா நடத்தப்பட்டது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்தின.
காலை 10
மணிக்கு
நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த விழா 11.20 மணிக்கு
துவங்கியது. தாமதமாக விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்,
வரவேற்புரை
நிகழ்ச்சி முடிந்ததும் சிறந்த பள்ளி கல்லூரி நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசு தொகை
வழங்கிவிட்டு விழா மேடையை விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.
விழா
அரங்கிலிருந்து திடீரென ஆட்சியர் சென்றதற்கு பெரும்பாலான நுகர்வோர் அமைப்புகள்
கண்டனம் தெரிவித்து விழாவை புறக்கணித்து அவர்களும் வெளியேறினர்.
உலக நுகர்வோர்
உரிமை தின விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வாழ்த்து செய்தி சொல்வது மரபாகும். அதனை
அவர் செய்யாமல் எந்த காரணத்தையும் கூறாமல், வந்த வேகத்திலேயே புறப்பட்டுச் சென்ற
ஆட்சியரின் நடவடிக்கை நுகர்வோர்களின் மனதை வேதனையடைய செய்து விட்டதாக கூறி
நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பினர் பொதுச் செயலாளர் நிஜாமுதீன் தலைமையில்
நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து விழா
நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தங்கவேலு
வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள்,
கடலூர்
கோட்டாட்சியர் டாக்டர் ஷர்மிளா, பொதுவிநியோகத் திட்டம் துணைப்பதிவாளர்
கமலக்கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல
மேலாளர் மணி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ராஜா
உள்பட பலர் வாழ்த்துரையும் கருத்துரையும் வழங்கினர். பள்ளி கல்லூரி நுகர்வோர்
மன்றத்தின், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராம
பகுதியினர் ஆகியோருக்கு இவ்விழாவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சிறப்பாக
செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த நுகர்வோர் மன்றங்களுக்கு
பரிசுத்தொகைகளும், மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் எழிலன் நன்றி கூறினார்.
பரிசு பெற்ற
பள்ளி கல்லூரிகள்:கடலூர்
மாவட்டத்தில்
சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லூரி நுகர்வோர் மன்றங்களில் முதல்பரிசு கடலூர்
பெரியார் அரசு கல்லூரிக்கும், இரண்டாம் பரிசு கடலூர் தூய வளனார் கலை
மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், மூன்றாம் பரிசு நெய்வேலி ஜவகர் அறிவியல்
கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.
பள்ளிகள் அளவில்
திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசும்,
நடுவீரப்பட்டு
அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டாம் பரிசும், விருத்தாசலம் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. பள்ளி கல்லூரி நுகர்வோர்
மன்றங்களுக்கும் முதல் பரிசாக தலா ரூ.1500ம், இரண்டாம் பரிசாக ரூ. ஆயிரமும்,
மூன்றாம் பரிசாக
ரூ.500ம்
வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
நடத்த
போவதாக
அறிவிப்பு
கடலூரில் நேற்று
நுகர்வோர் குழு கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் நிஜாமுதீன்
தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் திட்டக்குடி முத்துசாமி,
விருத்தாசலம்
செந்தமிழ்செல்வம், சிப்காட் அருள்செல்வம்,
பண்ருட்டி
ராஜவேலு,
நெல்லிக்குப்பம்
பாலசுப்ரமணியம், அரசன்குடி ராமமூர்த்தி,
வடலூர்
கல்விராயர், வேம்பு, கீரப்பாளையம் மோகனா உள்ளிட்ட நுகர்வோர் சங்க
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நுகர்வோர்
தொடர்பான எந்த ஒரு கூட்டத்திலும் ஆட்சியர் கலந்து கொள்வதில்லை. தொடர்ந்து
நுகர்வோர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து வருகிறார்.
நேற்றைய அரசு நுகர்வோர் விழாவிலும் மரபை மீறி இந்த அரசிற்கு அவப்பெயர் வருமாறு
ஆட்சியரின் நடவடிக்கை அமைந்திருந்தது. எனவே, ஆட்சியரின் நுகர்வோர் விரோத போக்கை கண்டித்து
வரும் 12ம் தேதி கடலூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,
என்பது உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினத்தந்தி 08.11.2014 சனிக்கிழமை
தினத்தந்தி 08.11.2014 சனிக்கிழமை |
உலக சுற்றுலா தினத்தையொட்டி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையும், பெரியார் அரசு கலைக்கல்லூரியும் இணைந்து வெள்ளிக்கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியை செய்தனா்.
1. தினத்தந்தி 29.10.2014 புதன்கிழமை
குப்பை தொட்டி
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் கடற்கரை
உள்ளது. இந்த சுற்றுலா தலத்துக்கு பொழுதுபோக்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள்
இங்குள்ள கடைகளில் உணவு பண்டங்களை வாங்கிச்சாப்பிட்டு விட்டு, பேப்பர்
தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை கடற்கரை மணல்பரப்பிலேயே வீசியெறிகிறார்கள்.
ஏனெனில் இங்கு குப்பைகளை போடுவதற்காக நகராட்சி
சார்பில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. பூங்கா சுற்றுச்சுவர் அருகே மட்டும்
ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணல்பரப்பெங்கும்
குப்பைகளாக காட்சி அளித்தது.
தூய்மை படுத்தும் பணி
இந்த நிலையில், உலக சுற்றுலா தினத்தையொட்டி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ்
சுற்றுலாத்துறையும், பெரியார் அரசு கலைக்கல்லூரியும் இணைந்து
வெள்ளிக்கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியை நேற்று மேற்கொண்டனர்.
இந்த பணியை உதவி கலெக்டர் ஷர்மிளா தொடங்கி
வைத்தார். இதில் அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள்
சுமார் 250 பேர் கலந்து கொண்டு வெள்ளிக்கடற்கரை மணல்
பரப்பில் கிடந்த குப்பைகளை சாக்குப்பைகளில் பொறுக்கி அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா அதிகாரி தமிழரசி, பெரியார்
கலைக்கல்லூரி முதல்வர் விசுவநாதன், நாட்டுநலப்பணித்திட்ட
அதிகாரி முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி வீரச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி 29.10.2014 புதன்கிழமை
2.தினமணி 31.10.2014 வெள்ளிக்கிழமை
சில்வர்
பீச்சில் தூய்மைப் பணி: கோட்டாட்சியர்
தொடங்கி வைத்தார்.
தூய்மை
இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் சில்வர் பீச்சை
தூய்மைப் படுத்தும் பணியை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச்சுக்கு
பொழுது போக்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள் இங்குள்ள கடைகளில் உணவுப்
பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, பேப்பர் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை
கடற்கரை மணல் பரப்பிலேயே வீசியெறிகின்றனர்.
இங்கு குப்பைகளை போடுவதற்காக நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. பூங்கா சுற்றுச்சுவர் அருகே மட்டும் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணல் பரப்பெங்கும் குப்பைகளாக காட்சி அளித்தது.
இந்நிலையில், உலக சுற்றுலா தினத்தையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையும், பெரியார் அரசு கலைக் கல்லூரியும் இணைந்து சில்வர் பீச்சை தூய்மைப் படுத்தும் பணியை புதன்கிழமை மேற்கொண்டனர். இந்த பணியை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா தொடங்கி வைத்தார். இதில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு சில்வர் பீச் மணல் பரப்பில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
சுற்றுலா அதிகாரி தமிழரசி, பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், வட்டாட்சியர் செழியன், நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி வீரச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
லேபிள்கள்:
தூய்மை இந்தியா,
பொியாா் கலைக் கல்லூாி,
Dr. V. N. Viswanathan
வெள்ளி, 7 நவம்பர், 2014
Periyar Government Arts College by awarding First Prize in conducting various consumers related awareness programmes "WORLD CONSUMER RIGHTS DAY – 2014"
WORLD CONSUMER RIGHTS DAY – 2014
"CITIZEN CUNSUMER CLUB"
On the event of World Consumer
Rights Day 2014, the Cuddalore district administration has crowned Periyar
Government Arts College by awarding First Prize in conducting various consumers
related awareness programmes. The Citizen Consumer Club lead by Dr.R.Thilak
Kumar from 2009 to 2014 received the cash prize of Rs.1500/ - from the District
Collector Mr.Suresh kumar. In the College premises, Dr.R.Thilak kumar was appreciated
by the Principal for his relentless services towards consumer education.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)