கடலூா் அரசு கல்லூாி முன்பு கவுரவ விாிவுரையாளா்கள் 6 மாத ஊதியம் வழங்க கோாி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தினத்தந்தி 28.10.2014- செவ்வாய்க்கிழமை |
தினத்தந்தி 28.10.2014- செவ்வாய்க்கிழமை |
தினமலா் 28.10.2014- செவ்வாய்க்கிழமை |
தினமலா் 28.10.2014- செவ்வாய்க்கிழமை |
தினமணி 28.10.2014 செவ்வாய்க்கிழமை
பொியாா் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினா்.
பொியாா் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினா்.
ஊதியம்
வழங்காததை கண்டித்து கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கெளரவ
விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் சுமார் 2
ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கான வகுப்பு நடத்துவதற்காக அரசு சார்பில் பேராசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர்கள்
பற்றாக்குறை மற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வகுப்புகள்
தடையின்றி செயல்பட கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
கடலூர் அரசுக் கல்லூரியில் இதுபோன்று நியமிக்கப்பட்டுள்ள 34 விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம்
வழங்கவில்லையாம்.
இதையடுத்து
திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்தனர். திங்கள்கிழமை காலை
மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்த நிலையில் விரிவுரையாளர்கள் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.