கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வணிகவியல் மாணவர்களுக்கான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் விழிப்புணர்வு கருத்தரங்கு 17.10.2014 அன்று நடைபெற்றது.
கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் பொரியார் கலைக் கல்லூரி முதல்வர் திரு. வ. நா. விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லூரியின் பொருளாதர துறைத்தலைவர் ந. கண்ணன் அவர்கள சிறப்புறை ஆற்றினார். பின்பு ICAI-ன் புதுச்சேரி கிளையின் தலைவர் “திரு விஜயகுமார் மோடி” மற்றும் அவர்களின் குழு இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்தியது. இக்கருத்தரங்கில் கடலூரை சேர்ந்த ஆடிட்டர்கள் M.S. ரவிச்சந்திரன் மற்றும் திரு. குமரகுரு சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் முனைவர் க. முருகதாஸ் அவர்கள் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பின் முக்கியதுவத்தையும் அதன் சாரம்சங்களையும் மாணவர்களுக்கு எளிமையாக எடுத்து கூறினார். வணிகவியல் துரை பேராசிரியர் திரு. சூசை ஜான் ரோசரியா துறையின் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சிறப்hன முறையில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக