|
தினமலா் 17.10.2014 வெள்ளிக்கிழமை |
|
தினமலா் 17.10.2014 வெள்ளிக்கிழமை |
தினத்தந்தி 17.10.2014 வெள்ளிக்கிழமை
தினமணி நாளிதழ் 17.10.2014 வெள்ளிக்கிழமையன்று வந்த செய்தி
உணவு
தரமில்லாமல் இருந்ததாக குற்றஞ்சாட்டி, கடலூர் அரசு பெரியார் கலைக்
கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர், தேவனாம்பட்டினத்தில்
உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 100-க்கும்
மேற்பட்டோர் கல்லூரி எதிரில் உள்ள பிற்பட்டோர் நல விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு
வியாழக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது. அது தரமாக இல்லாததாலும், விடுதியில்
கழிவறை சுத்தம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவை சாப்பிட
மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல
அலுவலர் குணசேகர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உணவு
தரமாக வழங்குவதாகவும்,
பிற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனையேற்று
மாணவர்கள் காலை 11 மணிக்கு தங்கள் போராட்டத்தை முடித்துக்
கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக