கடலூர் பெரியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது சட்டபல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி பேச்சு
தினத்தந்தி 17.10.2014 வெள்ளிக்கிழமை
Page 1 : Graduation Day Report_2014 |
Page 2 : Graduation Day Report_2014 |
Page 3 : Graduation Day Report_2014 |
மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது என கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி கூறினார்.
பட்டமளிப்பு விழா
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியின் 7–வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வணங்காமுடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 2011–12, 2012–13–ம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த 890 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:–
புரிந்து படிக்க வேண்டும்
மாணவர்கள் தேர்வுக்காக, பாடங்களை மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். இது தவறு. மனப்பாடம் செய்து படித்தால் எந்த பலனும் இல்லை. புரிந்து படிக்க வேண்டும். தாங்கள் படித்ததை வைத்து சொந்தமாக அறிவை பயன்படுத்தி தேர்வு எழுதவேண்டும். அதற்கு அவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் 100–க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. உலகிலேயே சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம் பெறவில்லை.
போதைக்கு அடிமையாகக்கூடாது
ஆங்கிலம் வர்த்தக மொழி. எனவே ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டாம் என்று நினைத்தால் தமிழிலாவது புலமையை வளர்த்துக்கொள்ளுங்கள். படிப்பு மட்டும்தான் ஒரே சொத்து என்று கிடையாது. படிப்பை விட பெரிய சொத்து உண்டு.
உலகிலேயே அதிக அளவில் காப்புரிமை பெற்ற நாடுகளில் ஒன்று தென் கொரியா. நம்மிடம் எவ்வளவு அறிவு வளம், சிறப்பம்சங்கள் இருந்தும் நாம் காப்புரிமை பெறுவது கிடையாது. நம்முடைய அறிவுக்கு காப்புரிமை பெற வேண்டும்.
மாணவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது. மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் வேலைகள் நிறைய உள்ளன. எனவே வேலை கிடைக்கவில்லையே என்று மனம் தளர கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக