கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் மாநில அளவிலான தமிழ் கருத்தரங்கு 29.01.2014 அன்று நடைபெற்றது.
29.01.2014 (புதன்கிழமை) அன்று நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக் கொற்கை வேந்தன் வரவேற்றார். பேராசிரியர் அர்த்தநாரி அறிமுக உரையாற்றினார்.
புதுச்சேரி மாநில தமிழ் சங்கத் தலைவர் முத்து, கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். "சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும், நாட்டுப்புற மீனவர் பாடல்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொடக்க விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 30 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கு 30.01.214 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைந்தது.