கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான வேதியியல் திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியலில் மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு (SLPT-2014) 26.01.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கும், உதவித்தொகையுடன் கூடிய பி.எச்.டி.ஆய்வுப்படிப்பை மேற்கொள்வதற்கும் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் பல்கலைகழக மான்ய நல்கலைக்குழு தகுதித் தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் இரண்டு வாரகால இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க, மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு 26.01.2014 அன்று மாநிலம் முழுவதும் 6 மையங்களில் நடைபெற்றது.

இத்தேர்வு கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில், கல்லூரியின் வேதியியல் துறையும், ராமசுப்பு ஜெயராமன் அறிவியல் அறக்கட்டளையும் இணைந்து முதல்வர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இத்தேர்வில் கடலூர் மையத்தில் பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த முதுகலை வேதியியல் மாணவ, மாணவிகள் 60 பேர் பங்கேற்று இத்தேர்வை எழுதினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக