கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளைஞர் ரெட்கிராஸ், இந்தியன் ரெட்கிராஸ்
சங்கங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில்
நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இளைஞர் ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், இந்தியன் ரெட்கிராஸ் கடலூர் செயலாளர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் டேவிட் சவுந்தர், ராயப்பன், முனைவர் முகுந்தன், பாரி, பிள்ளைவேந்தன், இளவரசி, தியாகராஜன், தங்கவேல், தேனினியன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஜெகதீசன் பேசுகையில்,
பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை உருவாக்கும் பணியினை கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதி மீறல்கள், போக்குவரத்து நெருக்கடிகள், பழுதடைந்த சிக்னல்கள் உள்ளிட்டவைகளை பார்த்த உடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு மாணவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
சாலை விழிப்புணர்வு குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது பட்டிமன்றத்தில் பேராசிரியர் அர்த்தநாரி, கவிஞர் வெற்றிச்செல்வி சண்முகம், மாணவர் விஜய், பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், பிரேமகுமாரி, மாணவி பெரியநாயகி ஆகியோர் பங்கேற்றனர். பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் இளங்கோ நடுவராக இருந்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக