கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர்
சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கவுன்சிலிங்
தொடங்கிய 1 மணி நேரத்தில் கணினி அறிவியல் பாடத்துக்கான சேர்க்கை
முடிவடைந்தது.
கலந்தாய்வு:
தமிழகம் முழுவதும் அரசு கலை
அறிவியல் கல்லூரிகளில் 2013–14–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
நடைபெற்று வருகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக்
கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
நேற்று முன்தினம் (24/06/2013) தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வில் முதல்
நாளான நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவனத்தினரின்
பிள்ளைகள், என்.சி.சி.யில் ‘ஏ‘ சான்றிழ் பெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோருக்கான
கலந்தாய்வு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 2–வது நாளான நேற்று
(25/06/2013) காலையில் இதர பிரிவு மாணவர்களுக்கு கணக்கு, கம்ப்யூட்டர்
சயின்ஸ், புள்ளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில்
ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன்
தலைமையிலான ஆசிரியர் குழுவினர் இந்த கலந்தாய்வை நடத்தினர்.
பின்னர் இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் அளித்த பேட்டி:
சிறப்பு பிரிவினர்
கலந்தாய்வை பொறுத்தவரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூட இன்னும்
காலியிடங்கள் இருக்கின்றன. ஆனால் கலைக்கல்லூரிகளை பொறுத்தவரை அனைத்து பாட
பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று
முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான நடைபெற்ற கலந்தாய்வில்
மாற்றுத்திறனாளிகள் 6 பேரும், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 18
பேரும், என்.சி.சி. பிரிவில் ஒருவரும் என மொத்தம் 25 பேர் கலந்துகொண்டனர்.
முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கான பிரிவில் ஒருவர் கூட
கலந்துகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று (25/06/2013)
புள்ளியியல், கணக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு
நடைபெற்றது. இதில் கலந்தாய்வு நடைபெற்ற 1 மணி நேரத்தில் கம்ப்யூட்டர்
சயின்ஸ் பாடத்துக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்தது. கணக்கு பாடத்துக்கும்
ஓரளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
புள்ளியில் பாடம்:
புள்ளியல் பாடத்துக்கான கலந்தாய்வில் பகல் 1 மணிவரையில் 4 பேர் மட்டுமே
கலந்துகொண்டனர். இதற்கு பள்ளிக்கூடங்களில் புள்ளியில் பாடம் தனி பாடமாக
இல்லாததே காரணம். 12–ம் வகுப்பில் கணக்கு பாடத்துடன் சேர்ந்து புள்ளியியல்
பாடம் வருகிறது. இதனால் பள்ளியில் கணக்கு பாடம் எடுத்து படிக்கும்
மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது பெரும்பாலானோர் கணக்கு பாடத்தையே தேர்வு
செய்கிறார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பாடம் உள்ள ஒரே
கல்லூரி பெரியார் அரசு கல்லூரி தான்.
பெரியார் கல்லூரியில்
அனைத்து பாட பிரிவுகளுக்கும் மொத்தம் 900 இடங்கள் உள்ளன. இதில் வணிகவியல்
பாடத்துக்கு நிறையபேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக
ஆங்கிலபாடத்துக்கும், 3–வதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கும் மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இயற்பியல்–வேதியியல்:
தொடர்ந்து 3–வது நாளான இன்று(புதன்கிழமை) இயற்பியல், வேதியியல்
பாடங்களுக்கும், நாளை(வியாழக்கிழமை) தாவரவியல், விலங்கியல், தொழில்முறை
வேதியியல், மைக்ரோ பயாலஜி ஆகிய பாடங்களுக்கும், வருகிற 1–ந்
தேதி(திங்கட்கிழமை) வணிகவியல், பி.பி.ஏ. ஆகிய பாடங்களுக்கும், 2–ந்
தேதி(செவ்வாய்கிழமை) தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், 3–ந்
தேதி(புதன்கிழமை) பொருளியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய
பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
இதை தொடர்ந்து 2–வது கட்ட
கலந்தாய்வு வருகிற 8–ந் தேதி முதல் 10–ந் தேதி வரையிலும், 3–வது கட்ட
கலந்தாய்வு 18–ந் தேதியும் நடக்கிறது.
Read more...