செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை மூலம் ரூ.1 லட்சம் வங்கி சேமிப்பில் செலுத்தப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2010-2011-ம் மற்றும் 2011-2012-ம் ஆண்டில் கல்லூரி அளவில் தமிழ் பாடத்தில் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா கல்லூரியில் திங்கள்கிழமை 
(22/04/2013) அன்று  நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கோ.அய்யப்பன் 6 மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.1,500, இரண்டாம் பரிசாக ரூ.1,250, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, அறக்கட்டளை சேமிப்புக்கு மேலும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் பரிசுத்தொகையும் அதிகமாகும் என்றும் அய்யப்பன் தெரிவித்தார்.

விழாவில், கல்லூரி முதல்வர் வ.விஸ்வநாதன், தமிழியல் உயராய்வு மையத் தலைவர் சு.தமிழாழிக் கொற்கைவேந்தன், விலங்கியல் துறைத் தலைவர் இரா.ஜெயந்திதேவி, பேராசிரியர் அ.அர்த்தநாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP