கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இரண்டு நாள் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா 20/12/2012 அன்று நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை பேராசிரியர் கண்ணன் வரவேற்றார்.
தேசிய பல்லுயிர் பன்மைய வாரியத் தலைவர் ராமானுஜம் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில்,
தமிழக அரசு மாணவர்களிடையே பன்முக ஆளுமைத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை அளிக்கிறது. வேற்று மொழியினர் தமிழ் மொழியை தைரியமாக பேசுகின்றனர். இதேப் போன்று ஆங்கில மொழியை தைரியமாக பேச நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., பயிற்சி வகுப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விளக்கம் அளித்தார். பயிற்சி வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை தாவரவியல் துறை பேராசிரியர் நிர்மல்குமார் செய்திருந்தார். பயிற்சி வகுப்பு 22/12/2012 அன்று முடிவடைகிறது.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக