கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர் :
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு தனியாக விடுதி வசதி உள்ளது. இங்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விடுதியில் ஆங்காங்கே மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் தங்குவதற்கு சிரமமாக உள் ளது. ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளதால் சாரைக் காற்று உள்ளே வீசுகிறது.
மேலும், மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.