கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் :
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சேர விருப்பம் உள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2011-12ம் ஆண்டில் புதிதாக பாடப்பிரிவுகள் துவங்க அரசு அனுமதியளித்துள் து. இதில் பி.எஸ்சி., புள்ளியியல், எம்.எஸ்சி., தாவரவியல், எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, எம்.பிஎல்., தமிழ் (முழு நேரம்), பிஎச்.டி., தமிழ்., (முழு நேரம்) ஆகிய வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 28ம் தேதி வரை உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக