புதன், 25 டிசம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (24.12.2013) அன்று நடைபெற்றது. 

கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். இந்தியாவில் கிரெடிட் கார்டு மோசடிகள் என்ற தலைப்பில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலர் மருதவாணன், ஊக வணிகத்தில் விதிமுறைகளும் நுகர்வோர் பாதுகாப்பும் என்ற தலைப்பில் வழக்குரைஞர் கதிர்வேல் பேசினர். நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 19 டிசம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில்108 மூலிகை கொண்ட மூலிகைத் தோட்டம் அமைப்பு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் 108 மூலிகை கொண்ட மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கியது. 

கல்லூரி சார்பில் கெடிலம் நதியும், கடலூர் சேருமிடந்தில் வாழும் உயிரினங்கள் குறித்தும் பேராசிரியர் ராஜ்குமார் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கல்லூரில் தற்போது மூலிகைத் தோட்டம் அமைத்து அதில் 108 வகை மூலிகை வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை முதல்வர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

மூலிகைத்தோட்டம் அமைக்கும் பொருட்டு முதல்கட்டமாக சித்தரத்தை, கரும் துளசி, வெண் துளசி, புதினா, கருவேப்பிலை, கற்பூரவல்லி, வெற்றிலை, இஞ்சி, சோத்துக்கற்றாழை, எலுமிச்சை, இன்சுலின், வெட்டிவேர், சர்க்கரைக்கொல்லி, பப்பாளி, கொய்யா, பலா, செங்காந்தல், சைக்காஸ்  உள்ளிட்ட 20 மூலிகைச் செடிகள்  நடப்பட்டன. நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கீதாதேவி, ஒய்.ஆர்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், தோட்ட பராமரிப்பாளர் தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 17 டிசம்பர், 2013

திருவள்ளுவர் பல்கலைக்கழக தடகள போட்டிகளில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மது ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்

திருவள்ளுவர் பல்கலைக்கழக தடகள போட்டிகளில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் 14.12.2013 மற்றும் 15.12.2013 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் நடந்தது. இந்த போட்டியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மது, 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதல் பரிசையும், தத்தித் தாண்டும் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். மாணவர் மதுவை கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) வண்ணமுத்து, பேராசிரியர்கள் தமிழாழிக் கொற்கைவேந்தன், சிவசண்முக ராஜா உள்ளிட்டோர் பாராட்டி, வாழ்த்தினர். 
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 7 டிசம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டில் புதிதாக 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி கடிதம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் புதிதாக 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி கல்லூரியின் முதல்வர், கல்லூரி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., பி.காம்., எம்.காம்., எம்.எஸ்சி. உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4,095 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். நடப்புக் கல்வியாண்டில், எம்.எஸ்சி. வேதியியல், பி.ஏ. அரசியல் அறிவியல், பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, வரும் கல்வியாண்டில், மேலும், புதிதாக சில பாடப் பிரிவுகளைத் தொடங்க, கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் அளித்த பேட்டி:

வரும் 2014-15ம் கல்வியாண்டில், பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., எம்.எஸ்சி., பிரிவில் புள்ளியியல், மைக்ரோ பயாலஜி, எம்.பில்., பிரிவில் வணிகவியல், பொருளியியல், வரலாறு, பி.எச்டி பிரிவில் வரலாறு, இயற்பியல், விலங்கியல் உள்பட 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி, கல்லூரி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் சில பாடப் பிரிவுகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் உள்ளது. புதிய பாடப் பிரிவு தொடங்க தகுதியான ஆசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் போன்ற விவரங்கள் குறித்த அறிக்கைகள் கல்லூரியில் இருந்து திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்படும். வரும் கல்வியாண்டில் பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP