கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில்108 மூலிகை கொண்ட மூலிகைத் தோட்டம் அமைப்பு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் 108 மூலிகை கொண்ட மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கியது.
கல்லூரி சார்பில் கெடிலம் நதியும், கடலூர் சேருமிடந்தில் வாழும்
உயிரினங்கள் குறித்தும் பேராசிரியர் ராஜ்குமார் ஆய்வு செய்து
வருகிறார். இதன் ஒரு பகுதியாக கல்லூரில் தற்போது மூலிகைத் தோட்டம் அமைத்து அதில் 108 வகை மூலிகை வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை முதல்வர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
மூலிகைத்தோட்டம் அமைக்கும் பொருட்டு முதல்கட்டமாக சித்தரத்தை, கரும் துளசி, வெண் துளசி, புதினா, கருவேப்பிலை, கற்பூரவல்லி, வெற்றிலை, இஞ்சி, சோத்துக்கற்றாழை, எலுமிச்சை, இன்சுலின், வெட்டிவேர், சர்க்கரைக்கொல்லி, பப்பாளி, கொய்யா, பலா, செங்காந்தல், சைக்காஸ் உள்ளிட்ட 20 மூலிகைச் செடிகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கீதாதேவி, ஒய்.ஆர்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், தோட்ட பராமரிப்பாளர் தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்மூலிகைத்தோட்டம் அமைக்கும் பொருட்டு முதல்கட்டமாக சித்தரத்தை, கரும் துளசி, வெண் துளசி, புதினா, கருவேப்பிலை, கற்பூரவல்லி, வெற்றிலை, இஞ்சி, சோத்துக்கற்றாழை, எலுமிச்சை, இன்சுலின், வெட்டிவேர், சர்க்கரைக்கொல்லி, பப்பாளி, கொய்யா, பலா, செங்காந்தல், சைக்காஸ் உள்ளிட்ட 20 மூலிகைச் செடிகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கீதாதேவி, ஒய்.ஆர்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், தோட்ட பராமரிப்பாளர் தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக