வெள்ளி, 22 நவம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை  (21.11.2013) அன்று  நடந்தது. 

கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். பேராசிரியர் கண்ணன் வாழ்த்திப் பேசினார். விழாவில், எம்.பி.,யின் செய்தி தொடர்பாளர் குமார், விவசாய பிரிவு வேலுச்சாமி, எம்.பி.,யின் தலைமை நிலையச் செயலர் ரங்கமணி, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி  அழகிரி எம்.பி. பேசியது: 

பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகள் விண்கலம் அனுப்ப முடியாத நிலையில், இந்தியா அனுப்பியுள்ளது. இது மகத்தான சாதனை என்றாலும், இந்தியா மேலும், வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி என்பது கல்வி சார்ந்த பள்ளி, கல்லூரிகளில் இருந்து துவங்க முடியும். அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால், ஈரானில் கச்சா எண்ணெயை வாங்கும் திறன் எந்த நாட்டிற்கும் கிடையாது. அமெரிக்காவிற்கு ஆற்றல் எங்கிருந்து வந்தது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் விஞ்ஞானிகள் எண்ணிக்கை குறைவு. ஆனால், அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மனிதனின் சக்திக்கு ஆற்றல் குறைவு. தவறான சிந்தனைகளால் கவனம் சிதறக் கூடாது. தோல்வி எங்கிருந்து துவங்குகிறது என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும். சிறிய சிறிய விஷயங்களைப் பார்த்து கவனத்தைச் சிதற விடுகின்றனர். விவேகானந்தர் கூறியது போல், மாணவ, மாணவிகள் எதையும் படித்து சாதிக்க முடியும். வலிமை, அன்பு உள்ளவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற வேண்டும். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

Cuddalore MP K.S. Alagiri laid the foundation stone for the construction of additional class rooms a sum of Rs. 30 lakh on the premises of the Periyar Government Arts College

Cuddalore:

Cuddalore MP K.S. Alagiri laid the foundation stone for the construction of additional class rooms on the premises of the Periyar Government Arts College here on Thursday (21.11.2013). 

Speaking on the occasion, Mr. Alagiri said that a sum of Rs. 30 lakh had been sanctioned for the new structure from the MP’s Local Area Development fund. He told the contractor to guarantee quality in the construction. The MP called upon the student community to emerge stronger in the field of technology as only then the country could achieve real progress. He said he was astounded by the inventions of German students showcased in a machine tool expo held in that country during his recent visit. Principal V.N. Viswanathan said the college started with 236 students had now on its roll over 4,000 students. Twenty-five new courses would be started from the next academic year. As such, the existing infrastructure in the college could not cope with the increasing demand. He thanked the MP for having sanctioned Rs. 30 lakh for a new wing that would also have an open auditorium. 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 20 நவம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு

கடலூர்:

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை முடிவு செய்யும் பொருட்டு, கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை (19.11.2013) ஆய்வு மேற்கொண்டார். 

கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி கடலூர் மக்களவை தொகுதி உள்ளது. மக்களவை தேர்தல் 2014ஆம் ஆண்டு வருவதையொட்டி, தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கடலூர் மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தை முடிவு செய்ய, மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். எஸ்.பி ஆ.ராதிகா, சார் ஆட்சியர் ரா.லலிதா உடனிருந்தனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP