கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு
கடலூர்:
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை முடிவு செய்யும் பொருட்டு, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை (19.11.2013) ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி கடலூர் மக்களவை தொகுதி உள்ளது.
மக்களவை தேர்தல் 2014ஆம் ஆண்டு வருவதையொட்டி, தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கடலூர் மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தை முடிவு செய்ய, மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். எஸ்.பி ஆ.ராதிகா, சார் ஆட்சியர் ரா.லலிதா உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக